Posts

Showing posts from February, 2021

ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்.. ராஜாவாக மாறும் விஜய் சேதுபதி

Image
ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்.. ராஜாவாக மாறும் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் துணை நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் சின்ன சின்ன முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக மாறி தற்போது தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளவர்தான் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் விஜய்யை விட விஜய் சேதுபதிக்கு வில்லனாக மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி உள்ளது. ஏன் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் சிரஞ்சீவிகூட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தை புகழ்ந்து பேசினார். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு கோடி வரை சம்பளம் கேட்கிறாராம் விஜய் சேதுபதி. கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள். அந்த வகையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் விஜய் சேதுபதியை பார்க்கலாம் என்கிறார்கள். சாஃப்ட் இட்லி: பிசுபிசுன்னு ஒட்டாமல் எடுக்கும் ரகசியம் இதுதான்! மேலும் தெலுங்கில் கடைசியாக வெளியான உப்பனா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கொடூர வில்லன் கதாபாத்திரம் தெலுங்கு ரசிகர்களால் பயங்கரமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் கூடுதல் தகவல். தினமும் இரவில் ஃப்

இனி வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் போதும்… மத்திய அரசின் புதிய திட்டம். செம ஹேப்பியில் ஊழியர்கள்..!

Image
4 நாட்கள் வேலை செய்தால் போதும்  மத்திய அமைச்சகம் வேலை நாட்கள் தொடர்பாக வரும் நாட்களில், புதிய நெறிமுறைகள் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், நீங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் ஊழியர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இது குறித்த இறுதி விதிகளை விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் புதிய திட்டம்  இப்போது அனைத்து நிறுவனங்களிலும் வாரத்தில் 6 நாட்கள், தினமும் 8 மணிநேரமும் என்ற வகையில் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வாரத்தில் 48 மணிநேரம் வேலை செய்கிறார்கள். தற்போது ஒரு வாரத்தில் 1 நாள் விடுப்பு உள்ளது. ஆனால் புதிய விதியின் கீழ், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும்.  தினமும் இரவில் ஃப்ரைட் ரைஸ்... இரு குழந்தைகள் அடுத்தடுத்து பலியான பரிதாபம்! அதாவது, ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும், வாரத்தில் நான்கு நாட்களில் 48 மணி

சாஃப்ட் இட்லி: பிசுபிசுன்னு ஒட்டாமல் எடுக்கும் ரகசியம் இதுதான்!

Image
சாஃப்ட் இட்லி: பிசுபிசுன்னு ஒட்டாமல் எடுக்கும் ரகசியம் இதுதான்! இட்லி மல்லிகைப் பூ போல மென்மையாகவும், பிசுபிசுவென ஒட்டாமலும் அவிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுக்காக இதோ சில குறிப்புகளைத் தருகிறோம். தமிழர்களின் மாநில உணவு போல பார்க்ப்படுகிறது இட்லி. மல்லிகைப் பூ போன்ற மிருதுவான இட்லியும் அதற்கு ஜோடியாக சுவையான சட்னி, சாம்பார் வைக்கும்போது இட்லியை அடிச்சுக்க ஆளே இல்லை என்று சொல்லலாம். மல்லிகைப் பூ போல, பஞ்சு போல இட்லி மென்மையாக இட்லி அவிக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த இட்லி அவிக்கும்போது ஒட்டாமலும் வர வேண்டும் அப்போதுடஹன் இட்லி நன்றாக இருக்கும். இட்லி மல்லிகைப் பூ போல மென்மையாகவும், பிசுபிசுவென ஒட்டாமலும் அவிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுக்காக இதோ சில குறிப்புகளைத் தருகிறோம்.   சாஃப்ட்டான இட்லி பிசுபிசுன்னு ஒட்டாமல் எடுக்கும் ரகசியம்: மல்லிகைப் பூ போல, பஞ்சு போல இட்லி மிருதுவாக இருப்பதற்கு முதலில் அனைவரும் கட்டாயம் காட்டன் துணி பயன்படுத்த வேண்டும். இட்லி ஊற்றுவதற்கு காட்டன் துணி பயன்படுத்தாமல் அப்படியே இட்லி தட்டில் மாவை ஊற்றினால் இட்லி தட்டில் பிசுபிசு என்று

தினமும் இரவில் ஃப்ரைட் ரைஸ்... இரு குழந்தைகள் அடுத்தடுத்து பலியான பரிதாபம்!

Image
  தினமும் இரவில் ஃப்ரைட் ரைஸ்... இரு குழந்தைகள் அடுத்தடுத்து பலியான பரிதாபம்! திருப்பூரில் தினமும் இரவில் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டு வந்த இரு குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் - ஆர்த்தி தம்பதியினருக்கு 7 வயதில் பிரையன் மற்றும் 3வயதில் அனில் என்ற இருமகன்களும், 4வயதில் பிரியங்கா என்ற மகளும் உள்ளனர். திருப்பூர் தண்ணீர்பந்தல் பகுதியில் சந்தோஷ் வசித்தார். அந்த பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகளை சமைக்கும் வேலையில் சந்தோஷ் உள்ளார். இரவு பணி முடிந்ததும் வீட்டுக்கு தாமதாமாக வரும் சந்தோஷ் தன் குழந்தைகளுக்கு இரவில் ஃப்ரைடு ரைஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். சாஃப்ட் இட்லி: பிசுபிசுன்னு ஒட்டாமல் எடுக்கும் ரகசியம் இதுதான்! அதேபோல நேற்றும் பணி முடிந்து இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்த சந்தோஷ் , தான் எடுத்து வந்த ஃப்ரைடு ரைஸை தனது மூத்த மகன் ப்ரையன் மற்றும் மகள் பிரியங்காவுக்கு கொடுத்துள்ளார். இரவில் உறக்க கலக்கத்தில் உணவு சாப்பிட்டு விட்டு குழந்தைகள் படுத்துள்ளனர். காலையில் சிறுவன் ப்